அம்மா...நீ மாறிவிட்டாய்....
காபித்தூள் வாங்கிவர அன்று என்னை அனுப்பியபோது
கா ரூபாய் சுட்டதற்காக ...என்னை சூடு வைத்து அழவைத்தாய்!
பொய் சொல்லாதே ...பொய் சொல்லாதே ....என்று சொல்லி
அன்று என்னை அடித்து நொறுக்கி அலற வைத்தாய!
மாலை வேளையில் கிரிக்கெட் விளையாடி விட்டு
இருட்டியபின் வீடு வந்தால்
இது தவறு என்று சொல்லாமல் சொல்லி - மடி தர மறுப்பாய்!
சாப்பிடும் போது குமுதம் படித்தால் -
விருந்தினர் முன் கால் மேல் கால் போட்டால் -
வாயை திறந்து வைத்து சாப்பிட்டால் -
ஒன்பது மணிக்கு மேல் டிவி பார்த்தால் -
நீயே என்னை பார்த்து அழும் வரை என்னை அடிப்பாய்!
இப்படி சிறு சிறு தவறு செய்யும் பொழுதும்
என்னை திருத்திய நீ
ஏன் அம்மா நீ இப்பொழுது மாறிவிட்டாய்?
சிறுவயதில் நான் சின்னதாய் தவறு செய்தாலே
எரிமலை போல் எகிறி என்னை வேக வைத்ததுவிடுவாய்
பொய் சொல்லாதே என்று எனக்கு சொல்லி கொடுத்த நீயே இன்று இப்படியா?
தவறு எது , குற்றம் எது என்று புரிய வைத்த நீயே
இப்படி அமைதி காப்பது ஏன்?
அம்மா...நீ மாறிவிட்டாய்....
அம்மா..அமெரிக்கா வந்த நாள் முதல்
உன்னிடம் மாதம் ஒரு முறை கூட ஒழுங்காக பேசுவது இல்லை - என்
தொலை பேசி கட்டண செலவு அதிகம் ஆகிவிடும் என்பதற்காக.
கோடி கோடி-யாக இங்கே நான் பணம் சம்பாதித்தும் - நம் ஊர்
கோடைக்காக ஒரு A .C வாங்கி தந்ததும் இல்லை!
பக்கத்து வீட்டு சரவனன் கூட
பம்பாயில் வேலை செய்தே தன் பெற்றோருக்கு
செல் போனும் , காரும் வாங்கி தந்திருக்கிறான்
அமெரிக்கா-வில் இருந்து கொண்டு - உங்களை
அம்போ வென்று விட்டு விட்டேன்.
இத்தனையும் நடக்கின்ற போதும் ...
என்னை ஏன் நீ தட்டி கேட்க வில்லை? வேண்டாம்
கொஞ்சம் சுட்டி காட்டி இருக்கலாம்!
நீ ஏன் அம்மா மாறிவிட்டாய்?
நான் அன்று ரேஷன் கடையில் நாள் முழுதும் வெய்யிலில் நின்று
நமக்காக சர்க்கரை வாங்கி வந்ததை
நான் இன்னும் மறக்க வில்லை!
நீ எனக்காக அப்பாவிடம் பேசி வாங்கி கொடுக்கும்
அந்த சில பைசாவையும் மறக்கவில்லை!
எனக்கு பிடிக்கும் என்பாதால் ஒரு கடலை மிட்டாயை
தினம் என் பள்ளி மதிய டிபன் பாக்ஸ்இல் அனுப்பி வைத்தது இன்றும் இனிக்கின்றது
சமைக்க - சவுக்கு விறகு
நமக்காக சைக்கில் கேரியரில் கட்டி வாங்கி வந்ததை இன்றும் மறக்க வில்லை!
உன் மடியில் தூங்கி டிவி பார்த்ததையும் மறக்க வில்லை!
இப்படி நான் என்றும் உன் நினைவாக இருப்பினும்
இப்படி நான் என்றும் உன் நினைவாக இருப்பினும்
நீ ஏன் அம்மா மாறிவிட்டாய்?
நீ என்னை 20 வருடம் வளர்த்து ஆளாக்கி விட்டவள்..
நீ எனக்கு சரி எது தவறு எது என்று சொல்லி கொடுத்தவள்
தொலைபேசியில் உங்கள் நலம் பற்றியும்...அப்பாவின் நலம் பற்றியும் கேட்டால் ....
நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று ஏன் பொய் சொல்லவேண்டும்...?
புரிகின்றது மகனிடம் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று தானே ஒதுங்கி இருக்கிறாய்?
உன் பிள்ளை அல்லவா? ...இதுவுமா எனக்கு புரியாது?
என்ன செய்ய? சொல்லுங்கள் அம்மா?
இந்த ஊரின் பச்சை பணம்
சொந்த பாசத்தையே விலைக்கு வாங்க பார்க்கின்றது
உன்னை சொல்லியும் குற்றமில்லை
என்னை சொல்லியும் குற்றமில்லை
காலம் செய்த கோலம்!!
நான் உங்களை விட்டு விட்டு
அமெரிக்கா வந்ததே பாவம்!!